

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் அல்டாஃப் புகாரி ‘அப்னி பார்ட்டி’ என்ற புதியக் கட்சியைத் தொடங்கியதையடுத்து அது பாஜகவின் ‘பி’ டீம்தானே என்ற கேள்வி எழுந்ததையடுத்து பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் அதனை மறுத்துள்ளார்.
“காஷ்மீரில் இயல்பான அரசியல் நடவடிக்கைகளுக்கான அவர்களின் ஆசையின் விளைவே அப்னி பார்ட்டி கட்சியாகும். பாஜகவைப் பொறுத்தவரை காஷ்மீரில் இயல்பான அரசியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் எங்கள் காலடித்தடங்களை அங்கு விரிவுபடுத்துவதிலும் எங்கள் கவனம் எப்போதும் இருக்கும். எனவே புகாரியின் புதுக் கட்சியின் எதிர்காலம் குறித்து நாங்கள் கருத்துக் கூற விரும்பவில்லை.
ஆகவே அப்னி பார்ட்டி என்பது பாஜகவின் பி டீம் அல்ல” என்று ராம் மாதவ் மறுத்தார்.