காய்ச்சல் இருந்தால் திருமலைக்கு வர வேண்டாம்: தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்

காய்ச்சல் இருந்தால் திருமலைக்கு வர வேண்டாம்: தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்
Updated on
1 min read

என்.மகேஷ்குமார்

திருமலையில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது உலகம் முழுவதும்கோவிட்-19 வைரஸ் காய்ச்சல்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. திருமலையில் இந்தவைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துஅதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தப்பட்டது.

திருமலைக்குவரும்பக்தர்கள் முககவசம்அணிந்துவருவதுடன், அவ்வப்போது கைகளை கழுவுவதற்குதேவையான ஹாண்ட் வாஷ் கொண்டு வருவதும் நல்லது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஏனெனில், திருமலையில் காத்திருப்பு அறைகள், முடி காணிக்கை செலுத்தும் இடம், அன்னதான மையம் , வணிக வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

எனவே இங்கு வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் வந்தால் அது வேகமாக பரவ வாய்ப்புள்ளது. திருமலைக்கு வந்த பிறகு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு சென்றால் அங்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இவ்வாறு தர்மா ரெட்டி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in