

காங்கிரஸ் மூத்த தலைவரான முகுல் வாஸ்னிக் 60 வயதாகும் நிலையில் தனது நீண்டகால தோழியை திருமணம் செய்து கொண்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான முகுல் வாஸ்னிக் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை பாலகிருஷ்ணாவும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றியவர்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் நிர்வாக பொறுப்பை கவனித்து வரும் முகுல் வாஸ்னிக் தற்போது 60 வயதை கடந்துள்ளார்.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்தநிலையில் தனது நீண்டநாள் தோழியான ரவீணா குரானாவை நேற்று திருமணம் செய்து கொண்டார். புதுடெல்லியில் நட்சத்திர ஓட்டலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்களான அகமது படேல், அசோக் கெலோட், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.