Published : 09 Mar 2020 08:35 AM
Last Updated : 09 Mar 2020 08:35 AM

மாநிலங்களவைத் தேர்தல் 4 வேட்பாளர்களை அறிவித்தது திரிணமூல்

கொல்கத்தா: மாநிலங்களவையில் மேற்கு வங்கத்துக்கான 5 இடங்கள் காலியாகி உள்ளன. இந்த இடங்களுக்கு வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த தேர்தலுக்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் அர்பிதா கோஷ், மவுசம் நூர், தினேஷ் திரிவேதி, சுப்ரதா பக் ஷி ஆகிய 4 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர்களின் பெயர்களை நேற்று வெளியிட்டார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் காங்கிரஸுக்கு இருக்கும் உறுப்பினர்களை வைத்து பார்க்கும்போது, மாநிலங்களவைத் தேர்தலில் 4 இடங்களில் அக்கட்சி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

மீதமுள்ள ஓரிடத்தில் திரிணமூல் காங்கிரஸின் ஆதரவை பெற்றோ அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவை பெற்றோ காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறலாம் எனத் தெரிகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x