இவுங்க இல்லைனா...: சச்சின் டெண்டுல்கரைக் கவர்ந்த '5 பெண்கள்' யார்?

சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம்
சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம்
Updated on
1 min read

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுலகர், தனது வாழ்க்கையில்வந்த 5 பெண்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் சமூக ஊடகங்களில் இதுதொடர்பாக வீடியோவை வெளியிட்டு, தனது குழந்தைப் பருவம் முதல் இப்போது வரை இருக்கும் பெண்கள் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் தனது வெற்றிக்குப்பின் தனது தாய், அத்தை, மனைவி, மகள் மற்றும் மாமியார் ஆகியோர் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்

தனது தாய் ரஜினி பற்றி சச்சின் கூறுகையில், " என்னை எப்போதும் கவனத்துடன் பார்த்துக்கொள்ளும் எனது தாய், என் உடல்நலத்தில் தீவிரமான கவனம் செலுத்தி, என்னை மகிழ்ச்சியாக வைத்திருந்தார். எனது அத்தை மங்கலா டெண்டுல்கர் என் பள்ளிக்காலத்தில் 4 ஆண்டுகள் என்னுடன் இருந்து என்னைக் கவனித்துக்கொண்டார். அவரை இன்னொரு தாய் என்றுதான் கூறுவேன்.

மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியேயும் நான் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் எனக்கு ஆதரவாக இருந்த எனது மனைவி, அவரின் குடும்பத்தாருக்கு நன்றி. குடும்பபாரம் அனைத்தையும் எனது மனைவி சுமந்ததால்தான் நான் நிம்மதியாக நாட்டுக்காக விளையாட முடிந்தது. எனது மகளாக உருவாகியுள்ள எனது மகள் சாராவை நினைத்து பெருமையாக இருக்கிறது, உலகின் புதிய விஷயங்களை அறிய அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த 5 பெண்கள் இல்லாமல் இருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என எனக்குத் தெரியாது " எனத் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in