Published : 18 Aug 2015 08:35 AM
Last Updated : 18 Aug 2015 08:35 AM

துபாயில் மோடியின் பேச்சை கேட்க குவிந்த 50 ஆயிரம் இந்தியர்கள்

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.

அவரது பேச்சை கேட்க ஏராளமான இந்தியர்கள் ஆர்வம் காட்டியதால் மைதானத்தில் நுழைவதற்காக முன்பதிவு செய்யப்பட்டது. சுமார் 40 ஆயிரம் பேர் வரை அமர வசதியுள்ள துபாய் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதல் வசதி செய்யப்பட்டு மொத்தம் 50 ஆயிரம் பேர் அமர ஏற்பாடு செய்யப்பட்டது.

இது தவிர மைதானத்துக்கு வெளியே இருந்து மோடியின் பேச்சை கேட்க 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் இட வசதி செய்யப்பட்டது. நேற்று மாலை மோடி பேசியபோது 50 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அங்கு உற்சாகமாக குவிந்தனர். இவர்கள் தவிர ஏராளமான உள்ளூர் மக்களும் வந்திருந்தனர். இரவு 8 மணிக்குதான் மோடி பேசினார். ஆனால் மாலை 3 மணி முதலே இந்தியர்கள் அங்கு வரத் தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மைதானத்துக்குள் நுழைந்தனர்.

மோடி இந்தியில் பேசினார். அது உள்ளூர் ரேடியோக்களில் நேரடியாக ஒலிபரப்பானது. ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மோடி யின் பேச்சு உடனுக்குடன் மொழி பெயர்க்கப்பட்டு ரேடியோக்களில் ஒலித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் தமிழர்களும், மலை யாளிகளும் அதிகம் உள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு தலைவர் ஒருவரது பேச்சை கேட்க இந்த அளவுக்கு மக்கள் குவிவதும், அவரது பேச்சு ரேடியோவில் முக்கியத்துவம் கொடுத்து ஒலிபரப்பாவதும் இதுவே முதல்முறை.

மோடியின் வருகையை முன் னிட்டு துபாய் கிரிக்கெட் மைதான பகுதியே விழாக்கோலம் பூண்டது. ஏராளமான மக்கள் வந்து குவிந்த தால் தற்காலிகமாக உணவுக் கடைகளும் திறக்கப்பட்டன. மக்கள் வந்து செல்வதற்காக அரசு சார்பில் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் அப்பகு தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மோடி நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x