

ஜம்மு காஷ்மீரில் முன்னாள் நிதியமைச்சர் சையது அல்டாப் புகாரி (60) தலைமையில் ‘ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி (ஜேகேஏபி)’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி இன்று உதயமாகிறது.
மெகபூபா கட்சியை சேர்ந்த புகாரி, அவரது தலைமையிலான பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சியில் நிதி மற்றும் கல்வி அமைச்சராக இருந்தார். கடந்த 2018-ல் கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) செயல்பாடுகளில் மெகபூ பாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கட்சியை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் புதிய கட்சி தொடங்குகிறார். வேளாண் அறிவியல் பட்டதாரி யான புகாரி, செல்வாக்குமிக்க தொழிலதிபர் ஆவார்.
பிடிபி, தேசிய மாநாடு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் இவரது கட்சியில் இணைவார்கள் என கூறப்படுகிறது.