Published : 08 Mar 2020 11:23 AM
Last Updated : 08 Mar 2020 11:23 AM

ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் 60,000 சேவை டிக்கெட்கள் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை பல்வேறு சேவைகள் மூலம் தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் 60 ஆயிரம் சேவை டிக்கெட்களை வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி, வாராந்திர மற்றும் வருடாந்திர சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தினசரி மற்றும் வாராந்திர சேவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, பக்தர்கள் தங்களுக்கு வசதியான நாட்களில் சுவாமியை தரிசிக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆன்லைன் சேவைகளுக்கான 60,666 டிக்கெட்களை தேவஸ்தானம் நேற்று காலை வெளியிட்டது. இதில், குலுக்கல் முறையில், 9,966 டிக்கெட்களும், பொதுப் பிரிவில் 50,700 டிக்கெட்களும் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்களை பெற்ற பக்தர்கள் வரும் ஜூன் மாதம் சுவாமியை தரிசிக்கலாம்.

விசேஷ பூஜை 1,500, கல்யாண உற்சவம் 13,300, ஊஞ்சல் சேவை 4,200, ஆர்ஜித பிரம்மோற்சவம் 7,700, சகஸ்ர தீப அலங்கார சேவை 17,400 என்ற எண்ணிக்கையில் டிக்கெட்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x