Last Updated : 07 Mar, 2020 05:37 PM

 

Published : 07 Mar 2020 05:37 PM
Last Updated : 07 Mar 2020 05:37 PM

மகாராஷ்டிராவில் மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராட பெண்கள் காவல் படை

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராட பெண்கள் காவல் படை நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் பல பகுதிகளிலும் மாவோயிஸ்டுகளின் தாக்கம் கடுமையாக உள்ளதால் பல்வேறு கிராமங்களில் மக்கள் வாழ்க்கை நெருக்கடிமிக்கதாக மாறியுள்ளது. இந்நிலை மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக கட்சிரோலி மாவட்டத்திலும் உள்ளதாக மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்துள்ளது.

மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராட மாநில அரசு உருவாக்கியுள்ள பெண்கள் காவல் படையைக் குறித்து மகாராஷ்டிரா காவல்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:

பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இன்று பெண்கள் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வகையில் காவல்துறையின் முக்கியப் பிரிவுகளிலும் அவர்களை இடம்பெற அரசு திட்டமிட்டது. அவ்வகையில் மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராடும் படையிலும் பெண்கள் இடம்பெறுகின்றனர்.

இப்பிரிவில் இடம்பெறும் பெண்கள், உளவுத்துறை தகவல்களை சேகரிப்பது மற்றும் மாவோயிஸ்டுகள் தொடர்பான அனைத்து செய்திகள் மற்றும் தகவல்களின் பதிவை வைத்திருப்பது இந்த பெண் அதிகாரிகளின் முக்கிய வேலையாக இருக்கும்.

நியமிக்கப்பட்டுள்ள பெண் காவல் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் நக்சல் பாதிப்புள்ள உள்ளூர் கிராம மக்களுடன் மாவோயிஸ்டுகளைப் பற்றி பேசுவார்கள், மாவோயிஸ்டுகளின் மறைவிடங்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களைப் பெற அவர்களுடன் உரையாடுவார்கள்.

செய்திகள் சேகரிப்பது, உள்ளூர் மக்களுடன் உரையாடுவது மட்டுமின்றி வனப்பகுதிகளிலும் பெண் காவலர்கள் சென்று களத்தில் இறங்கி பணிபுரிவார்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் நுழைந்து தங்கள் ஆண் தோழர்களைப் போன்ற மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டைக்கான கூட்டு நடவடிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் செய்வார்கள்.

கூர்ந்து கவனிக்கும்போது, கட்சிரோலி மாவட்டத்தின் ஒவ்வொரு தொலைதூரப் பகுதியிலும், நக்சலைட்டுகளின் ஆபத்து நிலவுவதை உணர முடியும். இந்த பெண் அதிகாரிகள் கிராம மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் மாவோயிஸ்டுகளை எதிர்த்து அர்ப்பணிப்போடும் உறுதியோடும் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியைத் தரும்.

இவ்வாறு மகாராஷ்டிரா காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x