

நாட்டின் 69வது சுதந்திர தினமான இன்று, 824 பேருக்கு காவலர் பதக்கங்கள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். எல்லைக் காவல் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் சஞ்சய் தார் இறந்துவிட்டதால், இறப்புக்குப் பின் அளிக்கப்படும் விருதாக குடியரசுத் தலைவரின் வீர தீரச் செயலுக்கான பதக்கம் வழங்கப்பட்டது.
824 பதக்கங்களில் 4 வீர தீரச் செயலுக்கான குடியரசுத் தலைவர் பதக்கங்களும், வீர தீரச் செயலுக்கான 149 பதக்கங்களும், சிறந்த சேவை செய்தமைக்கான 76 குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கங்களும், சிறப்பாகப் பணியாற்றியதற்கான 595 போலீஸ் பதக்கங்களும் அடங்கும்.
இந்தப் பதக்கங்களில், சிபிஐ அமைப்பு 24 பதக்கங்களையும், மத்திய ரிசர்வ் காவல் படை 121 பதக்கங்களையும், எல்லைக் காவல் படை 53 பதக்கங்களையும், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை 24 பதக்கங்களையும், இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை 11 பதக்கங்களையும், சீமா சுரக்ஷா பால் 9 பதக்கங்களையும், சிறப்பு பாதுகாப்புக் குழு 3 பதக்கங்களையும், உளவுத்துறை 30 பதக்கங்களையும் பெற்றுள்ளன.