

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தனிநபர் வருமானம் தேசிய தனிநபர் வருமானத்தை விட அதிகம் என்று அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார். இன்று பட்ஜெட் உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இமாச்சலத்தின் தனிநபர் வருமானம் நாட்டின் தனிநபர் வருமானத்தை விட ரூ. 60,205 அதிகம் என்று முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் 2020-21 நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
மாநிலத்தின் தனிநபர் வருமானம் 6.6% அதிகரித்துள்ளதாக வர் தெரிவித்தார். 2018-19-ல் 1,83,108 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம் 2019-20-ல் 1,95,255 ஆக அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் தேசத்தின் தனிநபர் வருமானம் ரூ.1,35,050 என்று உள்ளதையடுத்து இமாச்சலத்தின் தனி நபர் வருமானம் தேசத்தின் தனிநபர் வருமானத்தை விட ரூ.60,205 அதிகம் என்கிறார் முதல்வர்.
மேலும் 50,000 விவசாயிகள் இயற்கை வேளாண் முறையைக் கடைப்பிடிப்பதாகவும் இதே முறையை மேலும் பல விவசாயிகள் கடைப்பிடிக்க ஊக்குவிப்புத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.
இந்தியா 5 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தை நோக்கி நடைபோட இமாச்சலம் பங்களிக்கும் என்றார் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்.
இதே ஜெய்ராம் தாக்கூதான் ‘பாரத் மாத கி ஜெய்’ சொல்பவர்கள்தான் இந்தியாவில் இருக்க முடியும் என்று பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.