ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் வெடிகுண்டுகள்: அசாமில் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு

ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் வெடிகுண்டுகள்: அசாமில் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு
Updated on
1 min read

அசாம் மாநிலத்தில் ரயிலை கவிழ்ப் பதற்காக கம்தாபூர் விடுதலை அமைப்பு தீவிரவாதிகள் தண்ட வாளத்தில் வைத்த வெடிகுண்டு களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து அகற்றினர்.

சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதி கள் இந்த சதிச் செயலில் ஈடு பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அசாம் மாநில அரசு அதிகாரிகள் கூறியது: கம்தாபூர் விடுதலை அமைப்பினர் சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக வும், இதற்காக ரயில்களை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தில் அவர்கள் வெடிகுண்டுகளை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் ராணுவத்தினர், துணை ராணுவப் படை மற்றும் போலீஸார் ரயில் பாதைகளில் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கோக்ரஜார் - நாகோன் மாவட்டத்துக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் சக்தி வாய்ந்த 4 வெடிகுண்டுகளை தீவிர வாதிகள் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதனை அகற்றினர். ரயில் கடக்கும் நேரத்தில் அந்த குண்டுகள் வெடித்திருந்தால் ரயில் கவிழ்ந்து பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்றனர்.

இதையடுத்து அப்பகுதி முழுவ தும் தீவிரவாதிகளை தேடும் பணியும், வேறு எங்கும் வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா என்று தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.

அப்போது ஓரிடத்தில் மறைந் திருந்த கம்தாபூர் விடுதலை அமைப்பின் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் குண்டு பாய்ந்து காயமடைந்தார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்தவரை வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சண்டை நடந்த இடத்தில் இருந்த 7 கிலோ வெடிப் பொருட் கள், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், ஏராளமான தோட்டாக்கள், 4 சிம் கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

நாகோன் மாவட்டத்தில் ஓரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனை யில் 3 வெடிகுண்டுகள் கைப் பற்றப்பட்டன. இதில் தொடர்புடைய நிஜிமுதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in