Published : 06 Mar 2020 07:39 AM
Last Updated : 06 Mar 2020 07:39 AM

சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்தன; நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20-ல் தூக்கு- டெல்லி நீதிமன்றம் உத்தரவு

அக் ஷய் குமார்

புதுடெல்லி

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கான சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலை யில், அவர்களை வரும் 20-ம் தேதி தூக்கிலிடுமாறு டெல்லி பாட்டி யாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த துணை மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதியன்று இரவு, பேருந்தில் தனது நண்பருடன் சென்றுக் கொண் டிருந்தார். அப்போது அந்தப் பேருந் தில் இருந்த ஓட்டுனர் உட்பட 6 பேர், அவரது நண்பரை தாக்கி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர், அங்கிருந்த இரும் புக் கம்பியால் நிர்பயாவை கடுமையாக தாக்கிய அவர்கள், அவரையும் அவரது நண்பரையும் ஓடும் பேருந்தில் இருந்து வீசி விட்டு சென்றனர். இந்தக் கொடூ ரத் தாக்குதலில் பலத்த காய மடைந்த நிர்பயாவை அங் கிருந்தவர்கள் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சில தினங்களில் அவர் உயிரிழந்தார்.

தலைநகர் டெல்லியில் நடை பெற்ற இந்த கோர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. இதுதொடர் பாக விசாரணை நடத்திய போலீ ஸார், இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்தனர். அவர் களில் ஒருவர் திஹார் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் சிறுவன் என்பதால் அவர் கூர்நோக்கு பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள குற்றவாளிகள் முகேஷ் சிங், பவன் குப்தா, அக் ஷய் குமார், வினய் சர்மா ஆகிய 4 பேருக்கும் 2013-ம் ஆண்டு டெல்லி விசாரணை நீதி மன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் வெவ்வேறு கால கட்டங்களில் உறுதி செய்தன.

ஆனால், அவர்களை தூக்கிலிடு வதற்கான தேதியை நிர்ணயிக்கு மாறு டெல்லி அரசோ, திஹார் சிறை நிர்வாகமோ நீதிமன்றத்தை அணுகாததால் அவர்களின் மரண தண்டனை கிடப்பில் போடப்பட்டது.

நினைவூட்டிய தெலங்கானா

இந்த சூழ்நிலையில், தெலங் கானாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண் மருத்துவர் ஒருவர் மர்ம நபர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள் ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப் பட்டார். அதன் பின்னர், இச்சம்பவத் தில் ஈடுபட்டதாக கைது செய்யப் பட்ட 4 பேரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

போலீஸாரின் இந்த நடவடிக் கைக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்தன. அதே சமயத்தில், நிர்பயா குற்றவாளி களுக்கு இன்னமும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாததற்கு கண்டனங்களும் எழுந்தன.

காப்பாற்றி வந்த சட்ட வாய்ப்பு

இதன் தொடர்ச்சியாக, குற்றவாளிகளை தூக்கிலிடுவதற் கான தேதியை நிர்ணயிக்குமாறு டெல்லி நீதிமன்றத்தில் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அவர்களை தூக்கிலிடுவதற்கு மூன்று முறை வாரன்ட்டுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால், சீராய்வு மனு, கருணை மனு போன்ற சட்ட வாய்ப்புகளால் குறிப்பிட்ட தேதிகளில் அவர்களை தூக்கிலிட முடியாமல் போனது.

தண்டனை தேதி அறிவிப்பு

இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளின் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனு நேற்று முன்தினம் நிராகரிப்பட்டதை அடுத்து, 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து, அவர்களை தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை நிர்ணயிக்கக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டெல்லி அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவானது, நீதிபதி தர்மேந்திர ராணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 20-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு உத்தரவிட்டார்.

மத்திய அரசு மனு ஒத்திவைப்பு

இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தது. தற்போது அவர் களை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த மனுவை வரும் 23-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்தி வைத்தது.

புதிய விடியல் - நிர்பயா தாயார் கருத்து

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நிர்பயா தாயார் ஆஷா தேவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மார்ச் 20-ம் தேதி குற்றவாளிகள் அனைவரும் நிச்சயம் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் நம்பிக்கை இருக்கிறது. அன்றை தினம்தான் எங்களுக்கான புதிய விடியலாக இருக்கப் போகிறது. ஏதேனும் வாய்ப்பு இருந்தால், அவர்கள் தூக்கிலிடப்படுவதை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x