

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் அயல்நாட்டுப் பயண செலவுகள் ரூ.446.52 கோடி என்று வெளிவிவகாரத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் செலவுகளில் தனி விமானச் செலவினங்களும் அடங்கும்.
இது தொடர்பாக அவர் கூறிய தகவலின்படி 2015-16-ல் ரூ.121.85 கோடியும், 2016-17-ல் ரூ. 78.52 கோடி, 2017-18-ல் 99.90 கோடியும், 2018-19-ல் ரூ.100.02 கோடியும் மோடி அயல்நாட்டுப் பயணங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது.
2019-20-ல் ரூ.46.23 கோடி செலவிடப்பட்டுள்ளதாக முரளீதரன் அளித்த தரவில் கூறப்பட்டுள்ளது.