Last Updated : 05 Mar, 2020 03:25 PM

 

Published : 05 Mar 2020 03:25 PM
Last Updated : 05 Mar 2020 03:25 PM

சாதி, மதம் கடந்து திருமணம் செய்தவர்களுக்காக பாதுகாப்பு இல்லங்கள்: கேரள அரசு புது திட்டம்

சாதி, மதம் கடந்து திருமணம் செய்தவர்கள் சொந்த சமூகங்களால் புறக்கக்கணிப்படும் நிலை ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாப்போடு தங்க வைப்பதற்காக, கேரள அரசு பாதுகாப்பு இல்லங்களைத் தொடங்கியுள்ளது.

சாதி கடந்து அல்லது மதம் கடந்து திருமணம் செய்துகொள்ளும் தம்பதியை ஊரை விட்டுத் தள்ளிவைப்பது அல்லது சாதி, சமுதாயத்தை விட்டு நீக்குவது போன்ற சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் அரங்கேறி வருகின்றன. சமீபத்திய ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் 23 வயது தலித் கிறிஸ்தவ நபர் ஒருவர் அவரது உயர் சாதி மனைவியின் உறவினர்களால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.

தங்கள் சாதி மற்றும் மதத்திற்கு வெளியே திருமணம் செய்து கொண்டவர்கள், இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. இதனால் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இதனைத் தவிர்ப்பதற்காக அவர்களைப் பாதுகாக்க கேரள அரசின் புதிய திட்டத்தைப் பற்றி சமூக நீதித்துறை அமைச்சர் கே கே ஷைலஜா இன்று சட்டப்பேரவையில் கூறியதாவது:

''சாதி, மதம் கடந்து திருமணம் செய்துகொண்ட தம்பதியர் புறக்கணிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

அவர்களுக்காக பாதுகாப்பு வசதிகளைத் திறப்பதற்கான தனித்துவமான முயற்சியை கேரள அரசின் சமூக நீதித்துறை அமைச்சகம் முன்னெடுத்துள்ளது. அவர்களுக்காக அனைத்து மாவட்டங்களிலும் ஓராண்டு வரை அவர்கள் தங்கிக்கொள்ளக்கூடிய பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மதங்களைக் கடந்து திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு அரசுப் பணியில் இட ஒதுக்கீடு வழங்க எந்தச் சட்டமும் தற்போது இல்லை. மற்றபடி அரசு வேலைகளில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் போன்றவற்றில் கருத்தில் கொள்ள வேண்டிய சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்''.

இவ்வாறு சமூக நீதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x