தேசவிரோத கோஷங்களில் ஈடுபடும் பாவச்செயலைச் செய்பவர்கள் யார்?: கல்லூரி ஆசிரியர்களுக்கு யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

தேசவிரோத கோஷங்களில் ஈடுபடும் பாவச்செயலைச் செய்பவர்கள் யார்?: கல்லூரி ஆசிரியர்களுக்கு யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
Updated on
1 min read

பல்கலைக் கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப் படுகிறது என்றால் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.

“கல்வி நிலையங்கள், நிறுவனங்களில் இந்தியாவுக்கு எதிரான தேச விரோத கோஷங்கள் எழுகிறது என்றால் மாணவர்களிடத்தில் என்ன மாதிரியான திரிபுகள் நடக்கின்றன என்பதை நாம் மதிப்பிடத் தயாராக வேண்டும்.

நாம் நம் பணிகளை நாட்டின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு குறித்து உறுதி மொழியுடன் தொடங்குகிறோம் ஆனால் இன்று நாட்டைப் பிரித்தாளும் சக்திகள் முளைத்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் ஆசிர்யர்களின் பங்கு என்னவென்பதை கண்காணிக்க வேண்டியுள்ளது, ஆசிரியர்களை தெய்வத்துக்குச் சமமாகக் கருதுவது நம் பாரம்பரியம்.
யார் யாரெல்லாம் இந்த பாவ காரியத்தில் ஈடுபடுகினறனர்? இன்று ஆசிரியர்கள் தங்கள் பங்கு என்னவென்பதை மதிப்பிடக் கடமைப் பட்டுள்ளனர்.

போலி ஆசிரியர்கள்தான் நம் பிரச்சினை, நம் அரசு முதலில் போலி ஆசிரியர்கள் பிரச்சனையை ஒழிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டது.

ஆசிரியர் என்பவர் அரசு ஊழியர் மட்டுமல்ல தேசத்தின் தலைவிதியையும் தீர்மானிப்பவர். ஆசிரியர்கள் சாணக்கியரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in