

பதவி விலகும் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் சுமார் 2.4 ஏக்கர் பரப்பளவில் மரம், செடி, கொடி களுடன் அடர்ந்த வனம்போல் உள்ள பங்களாவுக்கு இடம்பெயர்கிறார்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்ல மான எண் 7, ரேஸ்கோர்ஸ் சாலை யில் உள்ள வீட்டில் இருந்து எண் 3, மோதிலால் நேரு பிளேஸில் உள்ள பங்களாவுக்கு மன்மோகன் சிங் திங்கள்கிழமை இடம்பெயர்கிறார்.
இந்த பங்களாவில் மா, வேம்பு உள்பட பல்வேறு வகை களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் உள்ளன. இவை தவிர செடி, கொடிகள் என சிறிய வனப் பகுதிக்குள் இந்த பங்களா அமைந்துள்ளது.
இங்கு 200-க்கும் மேற்பட்ட வவ்வால்கள் உள்ளன. மேலும் புறா, புல்புல், மைனா உள்பட நூற்றுக்கணக்கான பறவைகளும் வாழ்கின்றன. ஏராளமான குரங்கு களும் பங்களாவில் சுதந்திரமாகத் சுற்றித் திரிகின்றன.
இதற்கு முன்பு முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் இந்த பங்களாவில் குடியிருந்தார். அவர் இருக்கும்போது பங்களாவின் இயற்கை எழில், சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக அக்கறை எடுத்துக் கொண்டார்.
அவர் பங்களாவை காலி செய்த பின்னர் கட்டிடத்தில் பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. எனினும் பங்களாவை சுற்றியுள்ள இயற்கை எழில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது.