கரோனா வைரஸ் தொற்றிய நோயாளியின் குடும்பத்தினர் 6 பேருக்கும் கோவிட்-19 பாதிப்பு

கரோனா வைரஸ் தொற்றிய நோயாளியின் குடும்பத்தினர் 6 பேருக்கும் கோவிட்-19 பாதிப்பு
Updated on
1 min read

இந்த வாரத் தொடக்கத்தில் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்ட டெல்லி நோயாளி ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அவர்களும் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதே போல் இத்தாலியிலிருந்து வந்த 21 பேர்களில் 14 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், இந்திய ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறும்போது, “கேரளாவில் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் குணமானதைத் தொடர்ந்து மேலும் மூன்று பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல் இத்தாலி பயணிகள் 14 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்கள் எங்கள் முகாமில் தனிப்பட்ட முறையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களது இந்திய ஓட்டுநருக்கும் கரோனா பரவியுள்ளது” என்றார் ஹர்ஷ வர்தன்”

கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் மக்கள் ஒன்று கூட வேண்டாம் என்ற உலகச் சுகாதார மைய எச்சரிக்கை காரணமாக பிரதமர் மோடி ஹோலி கொண்டாட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஈரானில் கோவிட்-19 சோதனைக்கூடம் ஒன்றையும் உருவாக்கவிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in