

டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தில் நேற்று அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
அவை கூடியதும், டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். இதனை ஏற்பட்ட அமளியால் அவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதே பிரச்சினையை மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர். அங்கும் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.