

ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக் கப்பட்ட மென்பொருள் பொறி யாளர் சிகிச்சை பெறுகிறார். அவரைத் தொடர்ந்து கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அறிகுறி களுடன் காந்தி மருத்துவமனைக்கு நேற்று 3 பேர் வந்தனர். இவர்கள் தனித்தனி வார்டில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு கிறது. இந்த காய்ச்சல் தெலங்கா னாவில் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஈடல ராஜேந்தர் தலைமையில் மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது அமைச்சர் பேசிய தாவது: காய்ச்சல் பரவுவதை தடுக்க நாம் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம். கை குலுக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள மென்பொருள் பொறியாளர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி 17-ம் தேதி நிறுவனத்தின் சார்பாக துபாய் சென்றுள்ளார். அங்கிருந்து அண்மையில் பெங்களூரு திரும்பியுள்ளார். அவரது அலுவலகத்தில் 2 நாட்கள் பணியாற்றியுள்ளார். கடந்த 22-ம் தேதி பேருந்தில் ஹைதராபாத் வந்துள்ளார். காய்ச்சல் காரணமாக முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டுள்ளார்.
அவரது குடும்பத்தினர், பெங்க ளூரு, ஹைதராபாத் அலுவலக ஊழியர்கள், அவரோடு பேருந் தில் பயணம் செய்த 27 பேர் என மொத்தம் 80 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.