மேற்கு வங்கத்தில் வசிக்கும் அனைத்து வங்கதேசத்தவர்களும் இந்திய குடிமக்களே: மம்தா பானர்ஜி 

மேற்கு வங்கத்தில் வசிக்கும் அனைத்து வங்கதேசத்தவர்களும் இந்திய குடிமக்களே: மம்தா பானர்ஜி 
Updated on
1 min read

வங்கதேசத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு வந்து வசிக்கும் தேர்தலில் வாக்களிக்கும் அனைவரும் இந்தியக் குடிமக்களே என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இவர்கள் புதிதாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க மாநிலம், கலியாகஞ்சில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா பேசும்போது, “வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் அனைவரும் இந்தியக் குடிமக்களே. நீங்கள் மீண்டும் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் வாக்களிக்கிறீர்கள், பிரதமர், முதல்வரைத் தேர்ந்தெருக்கிறீர்கள்.. இப்போது அவர்கள் நீங்கள் குடிமக்கள் இல்லை என்கின்றனர், அவர்களை நம்பாதீர்கள்” என்று கூறினார்.

மேலும் மேற்கு வங்கத்திலிருந்து ஒருவரைக் கூட வெளியேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது, இங்கு வசிக்கும் அகதிகள் குடியுரிமை இல்லாமல் செய்யப்பட மாட்டார்கள் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும் டெல்லி கலவரங்கள் குறித்து மம்தா கூறும்போது, “இது பெங்கால் என்பதை மறந்து விடாதீர்கள், இது டெல்லி அல்ல. டெல்லியில் நடந்தது போல் இங்கு நடக்க அனுமதிக்க மாட்டோம். பெங்கால் இன்னொரு டெல்லியாகவோ, இன்னொரு உத்தரப்பிரதேசமாகவோ மாற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று பேசியுள்ளார் மம்தா பானர்ஜி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in