Published : 03 Mar 2020 07:20 AM
Last Updated : 03 Mar 2020 07:20 AM

நீதிமன்ற வளாகத்தை திறந்துவைத்த ஊழியர்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு குவியும் பாராட்டு

நீதிமன்ற வளாகத்தை கடைநிலைஊழியர் ஒருவரை திறந்துவைக்குமாறு கூறியதால் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில் நீதிமன்றக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தலைமை நீதிபதி அபே ச்ரொநிவாஸ், துணை முதல்வர் அஸ்வத் நாராயண் அமைச்சர்கள் கோவிந்த கார்ஜோள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் நீதிமன்ற கட்டிடத்தை தலைமை நீதிபதி அபே ஸ்ரீநிவாஸ் திறந்துவைக்க இருந்தார்.

இந்நிலையில் கட்டிடத்தை திறந்துவைக்குமாறு நீதிமன்றத்தில் மூத்த கடைநிலை ஊழியராக இருக்கும் ஜெயராஜை, நீதிபதி அபே ஸ்ரீநிவாஸ் பணித்தார்.

இதையடுத்து ஜெயராஸும், பலத்த கரகோஷங்களுக்கு இடையே கட்டிடத்தைத் திறந்துவைத்தார்.

கட்டிடத்தை திறந்துவைக்க கடைநிலை ஊழியரை அனுமதித்த அபே ஸ்ரீநிவாஸுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஜெயராஜ் கூறும்போது, “நீதிபதி அபே ஸ்ரீநிவாஸ் இவ்வாறு கூறியதும் நான் ஆச்சர்யம் அடைந்தேன். பின்னர் அனைவரின் பாராட்டுகளுக்கு இடையே ரிப்பனை வெட்டி கட்டிடத்தை திறந்துவைத்தேன்.

பணி ஒய்வு

சிக்கப்பள்ளாப்பூர் நீதிமன்றத்தில் கடந்த 12 ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன். கட்டிடத்தை திறந்துவைக்குமாறு என்னைப் பணித்ததற்காக நான் கவுரவம் அடைந்துள்ளேன். இந்த ஆண்டு நான் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளேன். அதனால்தான் என்னை திறந்துவைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது” என்றார்.

கோலார் மாவட்டம் ஈலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இதற்கு முன்பு கோலார், முல்பாகல், கேஜிஎப் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x