

மத்தியப் பிரதேச மாநிலம், சிங்ராவுலி மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள அம்லோரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு உத்தரப்பிரதேசத்தை நோக்கி ஒரு சரக்கு ரயில் சென்றது. அதேநேரத்தில் காலியான பெட்டிகளை இழுத்துக்கொண்டு மத்தியப்பிரதேசம் நோக்கி வந்த சரக்கு ரயில் சென்ற. இந்த இரு ரயில்களும் கான்காஹாரி எனும் கிராமத்துக்கு வந்தபோது நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் இரு ரயில்களின் இரு எஞ்சின்களும் இருப்புப்பாதையை விட்டு விலகி தூக்கி எறியப்பட்டன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மீட்புப்படையினர், போலீஸார், தீயணைப்பு படையினர் ரயில்வே போலீஸார்,அதிகாரிகள் வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ரயில்களில் இடிபாடுகளில் சிக்கி இதில் சம்பவ இடத்திலேயே 3பேர் பலியானார்கள் அவர்களை அடையாளம் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சிங்காரவுலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் ஷிண்டே கூறுகையில், " நிலக்கரி ஏற்றிக்கொண்டு உ.பி நோக்கிச் சென்ற ரயிலும், காலிப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு உ.பி. நோக்கி வந்த சரக்கு ரயிலும் மோதிக்கொண்டன. இதில் இதுவரை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்தவிபத்தால் பயணிகள் ரயில் போக்குவரத்தில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.
தேசிய அனல்மின் கழகம் மட்டும் பயன்படுத்தும் பிரத்தியேக ரயில் பாதையில் இந்த விபத்து நடந்துள்ளதால், பயணிகள் ரயில் போக்குவரத்தில் பாதிப்பில்லை. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன" எனத் தெரிவித்தார்
இந்த விபத்துக் குறித்து கிழக்கு மத்திய ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் குமார் கூறுகையில், " இந்த விபத்துக்கும் ரயில்வே துறைக்கும் தொடர்பில்லை. இந்த ரயில்கள் முழுமையாக எம்ஜிஆர் முறையின்படி முழுமையாகத் தேசிய அனல் மின் கழகத்தின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் விபத்து நடந்ததும் என்டிபிசி நிறுவனம் மட்டும் பயன்படுத்தும் இருப்புப்பாதை" எனத் தெரிவித்தார்