Published : 01 Mar 2020 09:44 AM
Last Updated : 01 Mar 2020 09:44 AM

டெல்லி வன்முறையில் சேதமடைந்த வீரரின் வீட்டை கட்டித் தரும் எல்லை பாதுகாப்புப் படை

புதுடெல்லி

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர் முகமது அனீஸ் (29) டெல்லியைச் சேர்ந்தவர். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே ராதாபரி என்ற இடத்தில் தற்போது பணியாற்றி வருகிறார் விரைவில் அவர் டெல்லிக்கு பணியிட மாற்றம் பெற்று, தனது குடும்பத்துடன் இணையவுள்ளார்.

இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டத்தில் 42 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தின்போது கஜவுரி காஸ் பகுதியில் அமைந்திருந்த அனீஸின் பெற்றோரின் வீடும் நாசமானது.

இதுகுறித்து பிஎஸ்எப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிஎஸ்எப் நலவாரிய நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவிட்டு, முகமது அனீஸுக்கு புதிதாக வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். அவருக்கு ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கும் நிலையில், அதற்கு முன்பே அவருக்கு வீடு கட்டிக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

மேலும் அனீஸ் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு பிஎஸ்எப் டிஜஜி புஷ்பேந்திர ரத்தோர், டிஜிபி வி.கே. ஜோஹ்ரி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x