டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதல் இடத்தில் பெங்களூரு: இரண்டாம் இடத்தில் சென்னை

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதல் இடத்தில் பெங்களூரு: இரண்டாம் இடத்தில் சென்னை
Updated on
1 min read

நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதலிடத்தில் பெங்களூருவும், இரண்டாம் இடத்தில் சென்னையும் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் பொருள் மற்றும் சேவைகளுக்கு இந்திய அளவில் டிஜிட்டல் அடிப்படையிலான பணப் பரிவத்தனை குறித்து வேர்ல்டு லைன் பணப் பரிவர்த்தனை நிறுவனம் அண்மையில் ஆய்வு நடத்தியது. அதில், இந்திய அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. அங்கு இணையதள வியாபாரம், மளிகைக்கடை, உணவகம், திரையரங்கம், பெட்ரோல் நிலையம், துணி கடை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை மட்டுமல்லாமல் மத்திய அரசின் யூபிஐ மூலமாகவும் பண பரிவர்த்தனை அதிகமாக நடைபெற்றுள்ளது. 2019-ம் ஆண்டில் மட்டும் யூபிஐ மூலமாக நாடு முழுவதும் ரூ.1000 கோடி அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இது 2018-ம் ஆண்டைக் காட்டிலும் 188 சதவீதம் அதிகமாகும். இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தீபாவளி பண்டிகை காலத்தில் அதிக அளவில் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மாநகரங்களை பொறுத்தவரை பெங்களூரு முதலிடத்திலும், 2-ம் இடத்தில் சென்னையும், 3-ம்இடத்தில் மும்பையும், 6-ம் இடத்தில் டெல்லியும், 8-ம் இடத்தில் கோயம்புத்துரும் உள்ளன. மாநிலங்கள் பட்டியலில் முதலில் மகாராஷ்டிராவும், 2-ம் இடத்தில் கர்நாடகாவும், 3-ம் இடத்தில் தமிழகமும் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in