

இடதுசாரி கட்சியினர் முடிந்தால் எங்களை தோற்கடித்து உங்கள் ஆட்சியை மத்தியில் கொண்டு வாருங்கள், அதை விடுத்து மதச்சார்பின்மை,மனித உரிமைகள் பற்றி எங்களுக்கு பாடம் நடத்தாதீர்கள் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
குஜராத் மாநிலம் கேவாடியாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:
இடதுசாரி கட்சிகளில் உள்ள எனது நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களால் முடிந்தால் எங்களை தோற்கடித்து உங்கள் ஆட்சியை மத்தியில் கொண்டு வாருங்கள். மதச்சார்பின்மை, மனித உரிமைகள், ஜனநாயகம் பற்றி எங்களுக்கு பாடம் நடத்தாதீர்கள்.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி எப்போதாவது பேசியிருக்கிறீர்களா. இந்திய குடிமக்கள் என்பதை நிருபிக்க மக்களிடம் ஆதாரம் கேட்பதா எனக் கூறுகிறீ்ரகள். ஆனால் ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா என நீங்கள் கேட்கிறீ்ர்கள். இது தான் உங்களின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. ’’ எனக் கூறினார்.