

பிரியங்கா காந்தி சத்தீஷ்கர் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மத்திய பிரதேசத்திலிருந்து அவரை மாநிலங்களவைக்கு அனுப்ப வேண்டும் என அடம்பிடிக்கிறாராம் அம்மாநில காங்கிரஸ் முதல்வர் கமல் நாத். இதனுள்ளும் உள்குத்து அரசியல் இருக்கிறதாம். மபியில் காலியாகும் மூன்று ராஜ்ய சபா இடங்களில் இரண்டு காங்கிரஸுக்குக் கிடைக்கும். அதில் ஒன்றை முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கிற்கும் இன்னொன்றை கமல் நாத்தின் எதிர்கோஷ்டியான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கும் ஒதுக்க நினைக்கிறதாம் காங்கிரஸ் தலைமை. ஆனால், சிந்தியா மாநிலங்களவைக்குச் செல்வதை விரும்பாத கமல்நாத், பிரியங்கா காந்தியை மபியிலிருந்து மாநிலங்களவைக்கு அனுப்புகிறோம் என்று வலியப் போய் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். கமல்நாத்தின் கணக்கு பலிக்கிறதா இல்லை சிந்தியாவின் கை ஓங்குகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 1, 2020)