

மகாராஷ்டிர மாநிலத்தில், பிறக்கும்போதே 2 லட்சம் குழந்தைகளுக்கு எடை குறைவு, ஆரோக்கியக் குறைவு காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தனர் என்று அம்மாநில அரசு இன்று தெரிவித்தது. இவர்களில் 22,179 பேர் மும்பையில் பிறந்தவர்கள்.
ஐநாவின் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பிறக்கும் போது 2.5 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகள் குறைந்த பிறப்பு எடை பிரிவின் கீழ் வருகின்றன. இது குழந்தை இறப்புகளுக்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாகும்.
சுகாதார முகாமைத்துவ தகவல் அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி பேசிய சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், 2018-19 ஆம் ஆண்டில் 1.5 கிலோவிற்கும் குறைவான எடையில் 2,11,772 குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களில் 22,179 பேர் மும்பையில் பிறந்தவர்கள். எச்.எம்.ஐ.எஸ் அறிக்கையின்படி 13,070 குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்தனர். இதில் 1,402 இறப்புகள் மும்பையில் பதிவாகியுள்ளதாக அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 முதல் 2019 டிசம்பர் 31 வரை, மாநிலத்தில் 12,147 குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே காலகட்டத்தில் புதிதாகப் பிறந்த 11,066 குழந்தைகள் இறந்துவிட்டதாக அவர் கூறினார்.