மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி
Updated on
1 min read

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப் பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 113 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இது 119 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் சுமார் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அக விலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் நடை பெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in