Last Updated : 27 Feb, 2020 08:52 PM

 

Published : 27 Feb 2020 08:52 PM
Last Updated : 27 Feb 2020 08:52 PM

டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மகளை துபாய் அழைத்துச் சென்ற தந்தை: மீட்டு அழைத்து வந்த சிபிஐ

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தன் 3 வயது மகளை துபாய்க்கு அழைத்துச் சென்ற தந்தையிடமிருந்து மகளை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தது சிபிஐ.

அமன் லோஹியா என்ற நபர் பிரபல தொழிலதிபரின் மகன், டெல்லியில் உள்ள சரும நோய் மருத்துவரான கிரண் கவுர் லோஹியாவுக்கும் அமன் லோஹியாவுக்கும் விவாகரதது தீர்ப்பாகி மகள் ரெய்னா யாருடன் இருக்க வேண்டும் என்ற வழக்கில் கோர்ட் தாயாருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கி வாரத்துக்கு 3 நாட்கள் தந்தை குழந்தையுடன் இருக்கலாம் என்று சலுகை அளித்ததோடு, அவரது பாஸ்போர்ட்டையும் கோர்ட்டில் சமர்பிக்க உத்தரவிட்டது கோர்ட். அவரும் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி கோர்ட் உத்தவரின் படி மகளுடன் நேரத்தை செலவிட வந்த அமன் லோஹியா, குடும்பத்துக்கு நெருக்கமான பவன் குமார் மற்றும் பணியாள் ஷியுராதியா தேவி ஆகியோருடன் குழந்தையை நேபாளம் மற்றும் பிற வளைகுடா நாடுகள் வழியாக துபாய்க்கு அழைத்துச் சென்றார். இதில் பன்னாட்டு தொடர்பு இருப்பதால் டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது. சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

உடனே சிபிஐ இண்டர்போலுக்கு மஞ்சள் நோட்டீஸ் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது, அதன் படியே காணாமல் போன நபராக தந்தை மகள் அறிவிக்கப்பட டிசம்பர் 2019-ல் அமன் லோஹியா மீது சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. குற்றச்சதி, கடத்தல், சட்டபூர்வமான காவலரிடமிருந்து குழந்தையைக் கடத்தல் ஆகிய குற்றப்பிரிவுகளில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. கரிபீய நாடான டொமினிகா பாஸ்போர்ட்டைக் கொண்டு துபாய்க்கு தப்பிச் செல்ல அமன் லோஹியா முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை நீதிமன்ற அவமதிப்பாக டெல்லி உயர்நீதிமன்றம் கண்டித்தது.

இந்நிலையில்தான் உச்ச நீதிமன்றம் உடனடியாக துபாய்க்குச் சென்று குழந்தை ரெய்னாவை மீட்டு வருமாறு உத்தரவிட்டது. சிபிஐ துபாய் விரைந்து அங்கு உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குழந்தையை மீட்டனர். குழந்தை பிப்.28ம் தேதியான நாளை உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x