

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மசூதிக்கு செல்வதற்கு முன்னால் நாட்டில் உள்ள மசூதி ஒன்றிற்கு பிரதமர் மோடி வருகை தந்திருக்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
"ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மசூதிக்குச் செல்வதற்கு முன்பாக நம் நாட்டில் உள்ள மசூதி ஒன்றிற்கு மோடி சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்று அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய பொதுச் செயலர் மவுலானா மொகமது வாலி ரெஹ்மானி போபாலில் இன்று செய்தியாளார்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
அபுதாபியில் உள்ள ஷெய்க் சயீத் கிராண்ட் மசூதிக்கு மோடி வருகை தந்தது குறித்து இவரிடம் கருத்து கேட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்