

கோவாவில் கடந்த ஆட்சியில் ஜப்பான் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட இருந்த இரண்டு நீர் மேம்பாட்டு திட்டங்களுக்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு, அமெரிக்காவின் லூயி பெர்கர் நிறுவனம், அமைச்சர்கள் சிலருக்கு லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் ஏற்கெனவே முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் சர்ச்சில் அலிமாவோ, ஜப்பான் அமைப்பின் இந்திய கிளை அதிகாரி ஆனந்த் வாச்சாசுந்தர் மற்றும் அமெரிக்க நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் சத்யகம் மொஹந்தி ஆகிய மூவரும் குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இவர்களில் மொஹந்திக்கு கடந்த திங்கள்கிழமை ஜாமீன் வழங் கப்பட்டதோடு, நாட்டை விட்டுச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. மற்ற இருவரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் ரத்து செய்தது.
இவர்கள் தவிர, முன்னாள் முதல்வர் திகம்பர் காமத்திடம் போலீஸார் இரண்டு முறை விசாரணை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர், தான் கைது செய்யப்படாமல் இருப்பதற் காக, முன் ஜாமீன் கோரி விண் ணப்பித்திருந்தார். நேற்று அந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி பி.பி.தேஷ்பாண்டே, அவருக்கு முன் ஜாமீன் வழங்கினார்.
அதோடு பிணையத் தொகை யான ரூ.1 லட்சம் செலுத்தவும் உத்தரவிட்டார்.