

கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்னா அருகே கால்வாயில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட அனைவரும் மீட்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் பெலகோலா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள 'ஸ்பந்தனா குழந்தைகள் நல மையத்தை' சேர்ந்த 10 பேர் நேற்று ரங்கப்பட்னா பகுதிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள தேவ்ராஜ் அர்ஸ் கால்வாய் அருகே வேன் வளைவில் வளைந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந் தனர். மேலும் 4 பேர் ஆற்றில் அடித் துச் செல்லப்பட்டனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.