

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ட்ரம்பின் மகள் இவான்கா இந்திய ஆடையான ஷெர்வானி அணிந்திருந்தார்.
உத்தர பிரதேசத்தின் முர்ஷிதாபாத், மேற்குவங்க பாணியில் நெய்யப்பட்ட வெள்ளை நிற ஷெர்வானி, அதே நிற பேன்ட்டை அவர் அணிந்திருந்தார். இது இந்திய, மேற்கத்திய பாணி ஆடையாகும். மும்பையை சேர்ந்த அனிதா டோங்ரே இந்த வகை ஷெர்வானியை 20 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்தார்.
அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சிக்கு இவான்கா ட்ரம்ப் மேற்கத்திய பாணி உடையை அணிந்திருந்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகை வரவேற்புக்கு அவர் இந்திய உடையை தேர்வு செய்ததற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள், பாராட்டுகள் குவிந்து வருகின்றன.