

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்தார். இவரை , ஜனாதிபதி , பிரதமர் மோடி வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
முப்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு ஏற்று கொண்டார். இதனையடுத்து மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளை பிரதமர் அறிமுகப்படுத்தினார்.
10.30 மணிக்கு ராஜ்காட்டில் மகாத்மா காந்தி சமாதிக்கு மலர் வளைய அஞ்சலி. 11.00 மணிக்கு பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தைகள் ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறுகிறது.
ட்ரம்ப் வருகையினால் இன்று ராஜ்காட் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட மாட்டாது.
மோடி -ட்ரம்ப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய வெளியுறவு விவகாரங்களான ஆப்கான் விவகாரம் ஆசியா-பசிபில் கூட்டுறவு வலுப்படுதல் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிகிறது.