Published : 24 Feb 2020 05:28 PM
Last Updated : 24 Feb 2020 05:28 PM

தமிழகக் கோயிலின் 15 ஆம் நூற்றாண்டு சிலை: திருப்பித் தரும்படி இந்தியா வேண்டுகோள்; வெளிப்படையாக விவாதிக்க பிரிட்டிஷ் மியூசியம் அழைப்பு

தமிழ்நாட்டின் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் 15 ஆம் நூற்றாண்டின் வெண்கலச் சிலையை திருப்பித் தருமாறு இங்கிலாந்து அருங்காட்சியகத்திடம் இந்தியா முறையான வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேரம் அதைப் பற்றி வெளிப்படையாக விவாதிக்க பிரிட்டிஷ் மியூசியம் அழைப்பு விடுத்துள்ளது.

உலகின் மிகப் பிரபலமான தொல்பொருள் மற்றும் கலைப்பொருட்களை வைத்திருக்கும் பிரிட்டிஷ் மியூசியம், 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலச் சிலையை 1967 ஆம் ஆண்டில் நல்ல நம்பிக்கையின்பேரில் ஒருவரிடமிருந்து வாங்கியதாகக் கூறியுள்ளது.

திருடப்பட்ட இந்திய கலைப்பொருட்கள் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு மீட்டெடுக்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. மிக சமீபத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் சுண்ணாம்பால் செதுக்கப்பட்ட சிற்பம் மீட்கப்பட்டது. இச்சிற்பம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தது.

ஸ்காட்லாந்து யார்டின் கலை மற்றும் பழம்பொருட்கள் பிரிவு சம்பந்தப்பட்ட அமெரிக்க-இங்கிலாந்து விசாரணையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழக சிற்பமான 'நவநீத கிருஷ்ணன்' வெண்கலச் சிற்பம், இந்தியத் தூதரகத்திடம் இங்கிலாந்தில் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது பிரிட்டிஷ் மியூசியத்தில் காணப்படும் வெண்கலச் சிலை, தமிழக ஸ்ரீ சவுந்தர்ராஜப் பெருமாள் கோயிலில் இருந்த திருமங்கை ஆழ்வார் சிலை ஆகும். இது இந்தியாவிலிருந்து திருடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து அஷ்மோலியன் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டின் கோயிலில் இருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் 15 ஆம் நூற்றாண்டின் வெண்கலச் சிலையை திருப்பித் தருமாறு எங்களிடம் இந்தியா முறையான வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாண்டிச்சேரியில் உள்ள IFP-EFEO இன்ஸ்டிடியூட்டின் ( Institut Francais de Pondichery and the Ecole francaise d’Extreme-Orient) புகைப்படக் காப்பகங்களின் ஆராய்ச்சியில் 1957 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீ சவுந்தர்ராஜபெருமாள் கோயிலில் அதே வெண்கலச் சிலை இருப்பதைக் காண முடிகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் சுயாதீன ஆராய்ச்சியாளர் ஒருவரால் பண்டைய சிலை இந்தியாவைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அந்த ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சேகரிக்கப்பட்ட வெண்கலச் சிலைகளில் ஒன்று தமிழகத்தைச் சேர்ந்தது என்று அஷ்மோலியன் அருங்காட்சியகத்திற்கு அறிவிக்கப்பட்டது, இந்த ஆராய்ச்சியாளரால் IFP-EFEO (பாண்டிச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட்) காப்பகம் மூலம் அடையாளம் காணப்பட்டது.

வெண்கலச் சிலைக்கு எதிராக எந்தக் கோரிக்கையும் இல்லை என்றாலும், பிரிட்டிஷ் மியூசியம் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இந்த விஷயத்தை இந்தியத் தூதரகத்துக்கு அதிகாரபூர்வமாகக் கொண்டு வந்தது. காவல்துறை ஆவணங்களில் உள்ள பதிவுகள் உட்பட மேலதிகத் தகவல்களை மியூசியம் கோரியது. இது பணியின் ஆதாரத்தை நிறுவ உதவும்.

சிற்பத்தை திருப்பி அனுப்புவது பற்றி மேலும் விவாதங்களை நடத்த வெளிப்படையாகவே நடந்துகொள்கிறோம். திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை சேகரிப்பில் எவ்வாறு வந்தது என்பதற்கான எந்த ஆதாரமும் தற்போது எங்களிடம் இல்லை. இந்தியத் தூதரகத்தின் ஆதரவோடு நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.

இது திருடப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். 1967 ஆம் ஆண்டில் நல்ல நம்பிக்கையின்பேரில்தான் இச்சிலை ஒருவரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது.

திருமங்கை ஆழ்வாரின் இந்தச் சிலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தால் 1967 ஆம் ஆண்டில் சோதேபியின் ஏல இல்லத்திலிருந்து ஜே ஆர் பெல்மாண்ட் (1886-1981) என்ற சேகரிப்பாளரின் சேகரிப்பிலிருந்து வாங்கி வைக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு அஷ்மோலியன் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x