

தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை சித்ரவதை செய்த தன் கணவனைக் கொன்று, தனது வீட்டின் செப்டிக் டாங்க்கில் அடக்கம் செய்த பெண் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
டெல்லியைச் சேர்ந்தவர் ஓம் பரத்வாஜ். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சீமா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட ஓம் பரத்வாஜ், சீமாவை சித்ரவதை செய்து வந்தார்.
கடந்த 15ம் தேதி குடித்துவிட்டு வந்த பரத்வாஜ்க்கும், சீமாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பரத்வாஜ் படுத்துவி ட்டார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த தன் கணவனின் கழுத்தை நெறித்துக் கொன்று, உடலை தனது வீட்டின் செப்டிக் டாங்க்கில் சீமா போட்டுவிட்டார். பின்னர், அதிலிருந்து துர்நாற்றம் பரவுவதைத் தடுக்க, கூலியாட்கள் நான்கு பேரை அழைத்து அந்த செப்டிக் டாங்க்கை மூடிவிட்டார்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், சீமா தனது குழந்தை களுடன் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஐந்து நாட்கள் கழித்து தான் செய்த குற்றத்தை தன் வீட்டில் கூறியுள்ளார்.
இதையடுத்து சீமா கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் மீது கொலை வழக்கும், சாட்சியங்களை அழித்ததற்கான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.