ட்ரம்ப் இந்திய வருகை: அகமதாபாத், ஆக்ராவில் ஏற்பாடுகள் தயார்

ட்ரம்ப் இந்திய வருகை: அகமதாபாத், ஆக்ராவில் ஏற்பாடுகள் தயார்
Updated on
2 min read

அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்க ஆக்ரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் முழு அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கலந்து கொள்ளும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சிக்காக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் அகமதாபாத்துக்கும் புதுடெல்லிக்கும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் வருகை தர உள்ளனர்.

அகமதாபாத்தில் வாகனத்தில் ட்ரம்பும், பிரதமர் மோடியும் பேரணியாக செல்கின்றனர். இரு தலைவர்களுக்கும் அகமதாபாத் மக்கள் வரவேற்பளிக்கின்றனர்.

அகமதாபாத்தில் உள்ள 1.10 லட்சம் இருக்கைகள் கொண்ட மோதேரா மைதானத்தில் நடைபெறும் ‘‘நமஸ்தே ட்ரம்ப்’’ என்ற பெயரி்ல் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவரது வருகைக்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக ஆக்ரா மற்றும் அகமதாபாத் நகரங்களில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in