Published : 22 Feb 2020 08:34 AM
Last Updated : 22 Feb 2020 08:34 AM

ராணுவத்தின் இணக்கமான நடவடிக்கையால் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்து வருகிறது

ராணுவத்தின் இணக்கமான நடவடிக்கையால் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளதாக ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் தலைவர்கள், பிரிவினைவாதிகள் கைது செய்யப்பட்டனர். தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் மேற்கொண்ட இணக்கமான நடவடிக்கைகளால் காஷ்மீரில் தீவிரவாதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து நகரில் பேட்டியளித்த ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கன்வல் ஜீத் சிங் தில்லான் கூறுகையில், ‘‘தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த ‘ஆபரேஷன் மா’ என்ற பெயரில் மக்களுடன் நெருக்கமாக பழகி இணக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன்படி, தீவிரவாதிகளுடன் அவர்களது தாயை பேச வைத்து மனதை மாற்றி தீவிரவாதத்தை கைவிடச் செய்துள்ளோம்.

என்கவுன்டரின்போது பொறியில் சிக்கிக் கொண்ட தீவிரவாதிகளைக் கூட கொல்லாமல் அவர்களின் தாய் மற்றும் உறவினர்கள், சமூக பெரியவர்களுடன் பேசவைத்து தீவிரவாத பாதையில் இருந்து அவர்களை மீட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்துள்ளோம்.

ராணுவம் மேற்கொண்ட இந்த இணக்கமான அணுகுமுறை நல்ல பலனைக் கொடுத்துள்ளது. ஏராளமான இளைஞர்கள் தீவிரவாதத்தைக் கைவிட்டிருப்பதுடன், தீவிரவாத இயக்கங்களில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x