

காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
அவை தொடங்கியதுமே, மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக கோஷமிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய அரசு சர்வாதி கார அரசு எனக் கோஷமிட்டனர்.
இதனால், மதியம் 12 மணி வரைக் கும் பின்னர் 2.00 மணி வரைக்கும் அவை இரண்டு முறை ஒத்திவைக் கப்பட்டது. அவை மீண்டும் கூடிய தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் வழக்கம் போல் அமளியில் ஈடுபட்டனர். அவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் சமாதானப்படுத்த முயற்சி செய்தும் முடியவில்லை. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.