

கர்நாடகாவில் ஏஐஎம்ஐஎம் தலைவர் வாரிஸ் பதான் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியதையடுத்து டிஆர்எஸ் கட்சி ஏஐஎம்ஐஎம்- உடன் இன்னமும் இணைதிருக்கப் போகிறதா? தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்னமும் தன்னை மதச்சார்பற்றவர் என்று கூறி கொள்ள ஆசைப்படுகிறாரா என்று தெலங்கானா மாநில பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூருவில் அசாசுதீன் ஓவைஸியின் பொதுக்கூட்டத்தில் வாரிஸ் பதான் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களையும் இந்திய எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பியதாகப் புகார் எழுந்துள்ளது இதனையடுத்து தெலங்கானா பாஜக தலைவர் கிருஷ்ணசாகர் ராவ், கேள்வி எழுப்பும்போது, “ ஏஐஎம்ஐஎம் உடன் கூட்டு வைத்துக் கொண்டே, அந்தக் கட்சி இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதைப் பார்த்துக் கொண்டே கேசிஆர் தன்னை இன்னமும் மதச்சார்பற்றவர் என்று கூறிக் கொள்வாரா?” என்று கேட்டுள்ளார்.
”அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்களை கேட்டுக் கொண்டே கேசிஆர் எப்படி பேசாமல் இருக்க முடிகிறது? அவர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் நிலைப்பட்டை தெளிவாக்க வேண்டமா?
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்கள் மற்றும் இந்துக்களுக்கு எதிராக அச்சுறுத்தும் கூற்றுக்களை எம்.ஐ.எம் கூறியதற்கு கேசிஆர் ஏன் எந்தக் கண்டனங்களையும் தெரிவிக்கவில்லை என்று பாஜக கேள்வி எழுப்புகிரது.
காங்கிரஸ், இடது சாரி, டி.ஆர்.எஸ். திரிணமூல் ஆகிய கட்சிகள் வகுப்புவாத கட்சிகளே. சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களின் உண்மையான திட்டம் என்னவென்பது புரிகிறது.
வாரிஸ் பத்தானுக்கு பாஜக கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. அசாசுதீன் ஓவைஸி, வாரிஸ் பதானின் பேச்சை நிறுத்தக்கோரவும் இல்லை, விஷத்தனமான வகுப்புவாத பேச்சுகளை அவர் கண்டிக்கவும் இல்லை” என்று தெலங்கானா பாஜக தலைவர் கிருஷ்ணசாகர் ராவ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.