

மத்திய அரசின் டிஜிட்டல் திட் டத்தை பெங்களூரு போலீஸார் சிறப்பாக செயல்படுத்துவதாக பிரதமர் மோடி பாராட்டுகளை தெரி வித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 1 காவல் நிலையங்களைத் தேர்வு செய்து, மத்திய அரசின் டிஜிட்டல் திட்டமான, குற்றச்செயல்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் முறையை (சி.சி.டி.என்.எஸ்) அறிமுகம் செய்தது.
இதன் மூலம் குற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிப்பவருக்கு விசாரணையில் ஒவ்வொரு படிநிலையும் எஸ்எம் எஸ், இ-மெயில் மூலம் தெரிவிக்கப்படும். விசாரணை தொடர்பான விவரங்களை அறிய குற்றவாளியும், புகார்தாரரும் காவல் நிலையம் உட்பட எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலைய வேண்டியதில்லை. இதன் மூலம் போலீஸார் குற்றச்செயல்களை யும், குற்றவாளிகள் குறித்த ஆவணங்களையும் மிக எளிய முறையில் பராமரிக்க முடியும்.
இந்த நவீன முறையைக் கையாளும் 3 காவல் நிலையங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
இதையடுத்து பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பெங்களூரு கப்பன் பூங்கா காவல் நிலைய போலீஸாருடன் பேசினார். அப்போது போலீ ஸார், குற்றவாளிகளை பிடிக்க கர்நாடக காவல்துறை பின்பற்றும் தகவல் தொழில்நுட்பம் குறித் தும், குற்றவாளிகள் குறித்த குறித்த தகவல்களை பரிமாற்றம் செய்வது குறித்தும் தெரிவித்தனர்.
மேலும் கர்நாடகாவின் அனைத்து காவல் நிலையங்கள் பின்பற்றும் நேர மேலாண்மை முறை, ஒருங்கிணைந்த தகவல் சேகரிப்பு மையம் ஆகியவற்றையும் விளக்கினர். அதற்கு பாராட்டு தெரிவித்த மோடி, “இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை பிற மாநிலங்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும்''என கருத்து தெரிவித்தார். பிரதமரின் பாராட்டைப் பெற்றதால், பெங்களூரு போலீஸார் உற்சாகம் அடைந்துள்ளனர்.