

டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீது வழக்கு பதிவு செய்ய ஆம் ஆத்மி அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி மாநில முதல்வராக இருந்தபோது தண்ணீர் பஞ்சம் உள்ள பகுதிகளில் தண்ணீர் விநியோகிப்பதற்காக டாங்கர்கள் வாங்கியதில் ஷீலா தீட்சித் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அது தொடர்பாக போலீஸில் எப்.ஐ.ஆர். பதிய டெல்லி அரசு முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லி அரசுக்கு நெருங்கிய தரப்பு ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் அளித்த தகவலில், டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, ஷீலா தீட்சித் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.