

உ.பி.யில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தின் நான்கு பேர், கடந்த ஆறு ஆண்டுகளில், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) யோகி ஆதித்யநாத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஸ்தியில் உள்ள ஓஜகஞ்ச் கிராமத்தின் கப்தங்கஞ்ச் தொகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் சந்திரா குடும்பத்தினர் நான்கு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த தகவலை தானாக அறிந்து கொண்ட என்.எச்.ஆர்.சி நான்கு வாரங்களில் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உ.பி. தலைமை செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளது.
பஸ்தியில் சமூக நலத் திட்டங்களை அமல்படுத்துவது குறித்த அறிக்கையையும், ஊட்டச்சத்துக் குறைபாடு இறப்புகள் நடந்ததாகக் கூறப்படும் குடும்பத்தைப் பற்றிய விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.
இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி பாஸ்தி, டாக்டர் ஜே.பி. திரிபாதி இன்று கூறியதாவது:
''ஹரிஷ் சந்திர பாண்டேவின் மனைவி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக எட்டு மாதங்களுக்கு முன்பு இறந்ததாகக் கூறப்படுகிறது. ஹரிஷ் சந்திராவின் மூன்று மகள்களும் சமீபத்திய ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக கிராமவாசிகள் எங்களிடம் தெரிவித்தனர்.
ஹரிஷ் சந்திர பாண்டே அவரது நான்கு வயது மகள் விந்தியவாசினி மட்டுமே எஞ்சியிருக்கும் உறுப்பினர்கள், அதே நேரத்தில் அவரது நான்கு வயது மகள் விந்தியவாசினி தீவிரமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஒரு நரம்பியல் கோளாறால் அவதிப்பட்டு வருகிறார், இதுவரை ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறியே இல்லை.
இந்நிலையில்தான் பஸ்தியில் ஹரிஷ் சந்திரா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், கடந்த ஆறு ஆண்டுகளில், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) யோகி ஆதித்யநாத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தற்போது எஞ்சி இருக்கும் ஹரிஷ் சந்திராவின் உடல்நலம் குன்றிய ஒரே மகள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். அதன்பிறகு அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும்''
இவ்வாறு மாநில தலைமை மருத்துவ அதிகாரி பாஸ்தி, டாக்டர் ஜே.பி. திரிபாதி தெரிவித்தார்.