Last Updated : 19 Feb, 2020 06:09 PM

 

Published : 19 Feb 2020 06:09 PM
Last Updated : 19 Feb 2020 06:09 PM

மக்களுக்கான சமூகக் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய 10 பேருக்கு இன்போசிஸ் அறக்கட்டளை விருதுகள்

பல்வேறு புதிய சமூகப் பயன்பாட்டுக் கருவிகளை கண்டுபிடித்த 10 பேருக்கு பிரபல ஐடி நிறுவனமான இனபோசிஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை ''ஆரோஹன் சமூக கண்டுபிடிப்பு விருதுகள்'' இன்று அறிவித்துள்ளது.

கால்-கை வலிப்பு நோயைக் கணிக்கக்கூடிய ஒரு சாதனம், நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் கொசுக்களால் பரவும் நோய்களைக் கண்டறியும் மற்றொரு சாதனம் மற்றும் ஒரு மேன்ஹோல் துப்புரவு ரோபோ ஆகியவற்றின் கண்டுபிடிப்பாளர்கள் இந்த விருதை வென்றுள்ளனர்.

இந்தியாவில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவாக புதுமையான தீர்வுகளை உருவாக்கும் விதமாக செயல்பட்டுவரும் தனிநபர்கள், அணிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

2018ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இன்போசிஸ் அறக்கட்டளை விருதுகளின் இரண்டாம் பதிப்பின் வெற்றியாளர்களை இன்போசிஸின் புரவலர் மற்றும் சி.எஸ்.ஆர் பிரிவினரால் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு, இன்போசிஸ் அறக்கட்டளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுகாதாரப் பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி, இலக்கு பராமரிப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய நான்கு விருது பிரிவுகளில் வெற்றியாளர்களை அடையாளம் கண்டுள்ளது, இத்துறைகளைச் சேர்ந்த 10 பேர் இன்போசிஸ் அறக்கட்டளை நிறுவிய விருதுகளைப் பெறுகின்றனர். மக்களுக்குத் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை வழங்கிய அவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக மொத்தம் 1.50 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது.

விருது பெற்ற வெற்றியாளர்களை வாழ்த்தி, இன்போசிஸ் அறக்கட்டளைத் தலைவர் சுதா மூர்த்தி கூறுகையில், ''இந்த புதிய கண்டுபிடிப்புகள் மக்களின் எதிர்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமைக குறைந்த செலவில் நிலையான தீர்வுகளை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்'' என்றார்.

விருதுபெறுபவர்களைப் பற்றிய விவரம் குறித்து இன்போசிஸ் கூறியுள்ளதாவது:

கொல்கத்தாவைச் சேர்ந்த பார்த்தா பிரதிம் தாஸ் மகாபத்ரா. உடலில் இருந்து இரத்தம் எடுக்காமலேயே .ஆக்ஸிஜன் செறிவு மற்றும் ஹீமோகுளோபின் அளவை அறியும் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் பினிதா எஸ் துங்கா மற்றும் டாக்டர் ரஷ்பேஹரி துங்கா ஆகியோர் கொசுக்களால் பரவும் மலேரியா, சிக்குன்குனியா மற்றும் டெங்கு, ஆகிய மூன்று நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களிலேயே திறம்படவும் துல்லியமாகவும் கண்டறியும் ஒரு சாதனத்தை உருவாக்கினர்:

மும்பையைச் சேர்ந்த டுமாஸ் (காசநோய், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் எய்ட்ஸ் அறக்கட்டளை) காசநோயை சிறுநீர் மூலமாகவேக் கண்டுபிடிக்கும் மிகக் குறைந்த செலவில் அதேநேரம் விரைவான சோதனையை உருவாக்கியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த கே.ரஷீத் கே, விமல் கோவிந்த் எம் கே மற்றும் நிகில் என் பி ஆகியோர் மனித வாழ்க்கையில் கண்ணியத்தை சேர்க்கும் நோக்கத்துடன் மேன்ஹோல் துப்புரவு ரோபோ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி இக்கருவி மேன்ஹோலில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கக் கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பி எல் ராமலிங்கம் மலிவு விலையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கினார், இது சிறப்பு குழந்தைகள் மற்றும் முதுகெலும்பு காயம் ஏற்பட்டுள்ள நபர்களுக்கு உதவக்கூடியது.

பெங்களூரைச் சேர்ந்த நிதேஷ் குமார் ஜாங்கிர், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு சுவாசத்திற்கு துணைபுரியும் பல ஆற்றல் கொண்ட சான்ஸ் என்ற மருத்துவக் கருவியை மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்வகையில் உருவாக்கினார்.

புதுடெல்லியைச் சேர்ந்த அனீஷ் கர்மா, இவர், மெக்கானிக்கல் ஆக்சுவேட்டட் ஸ்டான்ஸ் கன்ட்ரோல்ட் முழங்கால் மூட்டு ஆர்த்தோடிக் (MASC- KAFO) எனப்படும் மூட்டுப் பிரச்சினை உள்ளவர்களுக்காக முழங்கால் மூட்டு தானாக பூட்டுதல் மற்றும் திறத்தல் மூலம் சிறந்த மாற்றுக்கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த ராஜ்லட்சுமி போர்த்தாகூர், வலிப்பு நோய்களைக் கணிக்கவும், மனநல நிலைகளை அடையாளம் காணவும் கூடிய உடலில் அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

குரல் வளத்தை இழந்த தொண்டை புற்றுநோயாளிகளுக்கு மீண்டும் பேச உதவும் வகையில் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் விஷால் யு எஸ் ராவ் மற்றும் சஷாங்க் மகேஷ் ஆகியோர் ஓம் குரல் புரோஸ்டீசிஸை உருவாக்கியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ரோஹித் படேல் குறைந்த விலையில் வெங்காய பாதுகாக்கும் சாதனம் ஒன்றை உருவாக்கினார், இது மழைக்காலத்திலிருந்து வெங்காயத்தை நீண்டநாட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும்.

இவ்வாறு விருதுபெறுபவர்களைப் பற்றிய விவரம் குறித்து இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x