Last Updated : 18 Feb, 2020 07:51 PM

 

Published : 18 Feb 2020 07:51 PM
Last Updated : 18 Feb 2020 07:51 PM

பெற்றோரின் விவாகரத்தால் குழந்தைகள்தான் அதிக விலை கொடுக்கிறார்கள்; அன்பும், அரவணைப்பும் கிடைப்பதில்லை: உச்ச நீதிமன்றம் அறிவுரை

பெற்றோரின் விவாகரத்தால் யாரிடம் வளர்வது எனும் விஷயத்தில் அதிகமான இழப்பைச் சந்திப்பது குழந்தைகள்தான். அவர்கள் அதிகமான விலை கொடுக்கிறார்கள். பெற்றோர்கள் அன்பும், அரவணைப்பும் கிடைப்பதில்லை என்று உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்த ஒரு தம்பதி தங்கள் குழந்தைகள் யாரிடம் வளர்வது என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேதனையுடன் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர் அவர்கள் கூறியதாவது:

பெற்றோரின் விவாகரத்தால் யாரிடம் வளர்வது எனும் விஷயத்தில் அதிகமான இழப்பைச் சந்திப்பது குழந்தைகள்தான். அவர்கள் அதிகமான விலை கொடுக்கிறார்கள். பெற்றோர்கள் அன்பும், அரவணைப்பும் கிடைப்பதில்லை

குழந்தைகளின் உரிமை மதிக்கப்படுவது அவசியம், தாய், தந்தை இருவரின் அன்பும் குழந்தைக்கு அவசியம். திருமணப்பந்தம் முறிந்துவிட்டால் பெற்றோருக்கான பொறுப்பு முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை.

குழந்தைகள் யாரிடம் வளர வேண்டும் என்ற விஷயத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்கும்போது, பாதிக்கப்படுவது குழந்தைகள்தான் என்பதை மனதில் வைத்து முடிவு எடுக்க வேண்டும். கணவருக்கும், மனைவிக்கும் இடையிலான பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும், யாருக்குப் பலன் கிடைக்கும் என்றவிதத்தில் தீர்க்கக் கூடாது.

குழந்தைகள் யாரிடம் வளர்வது என்ற விஷயத்தில் தந்தை, தாய் யார் வெற்றி பெறுகிறார் என்பது விஷயமல்ல. இதில் எப்போதும் இழப்பைச் சந்திப்பது குழந்தைகள்தான். அவர்கள்தான் அதிகமான விலையைக் கொடுக்கிறார்கள். யாரிடம் குழந்தைகள் வளரலாம் என்று நீதிமன்றம் முடிவெடுத்தாலும் அங்கும் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.

குழந்தைகள் யாரிடம் வளரவேண்டும் என்ற விவகாரத்தில் முடிவு எடுக்கும்போது, குழந்தைகள் நலனில் உச்சபட்ச அக்கறையுடன் முடிவு எடுக்கவேண்டும். பெற்றோருக்கு இடையே விவகாரத்துச் சூழல் ஏற்படும்போது, எப்போதும் அதிகமான விலையையும், மனவேதனையையும் அனுபவிப்பது குழந்தைகள்தான்.

குழந்தைகள் யாரிடம் வளர்வது எனும் விஷயத்தில் முடிவு தாமதமின்றி எடுத்தால் குழந்தைகள் அதிகமான இழப்பைச் சந்திக்கிறார்கள். எந்தவிதமான தவறும் செய்யாத குழந்தைகள் பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் போகிறது. இந்த இழப்பை எந்த விதத்திலும் ஈடு செய்ய முடியாது.

பெற்றோருக்கு இடையே நடக்கும் பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்க்கவே நீதிமன்றம் முயல்கிறது. ஆனால், பாதிக்கப்படும் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு ஈகோ போரை கைவிட்டு, அவர்கள் முன்வர வேண்டும்.

பேரன், பேத்திகளின் அன்பும், அரவணைப்பையும் தாத்தா, பாட்டிகள் மட்டும் இழக்கவில்லை, குழந்தைகளும்தான் இழக்கிறார்கள். பெற்றோருக்கு இடையே ஏற்படும் பிரச்சினையால் அவர்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள்
மிகச்சிலருக்கு மட்டுமே தாத்தா, பாட்டிகளுடன் தங்கும் மகிழ்ச்சி குழந்தைகளுக்கும், பேரன்,பேத்திகளுடன் தங்கும் மகிழ்ச்சி தாத்தா, பாட்டிகளுக்கும் கிடைக்கிறது.

சிறந்த எதிர்காலம், அமைதி ஆகியவை கிடைக்க விவாகரத்து வழக்கில் சுமுகமான தீர்வைத் தேடிவரும் கணவருக்கும், மனைவிக்கும் இந்த வழக்கு தங்களைச் சுயபரிசீலனை செய்து கொள்ளப் பாடமாக அமையும்
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் விவாகரத்து கோரி தாக்கல் செய்த கணவருக்கும், மனைவிக்கும் விவகாரத்து வழங்குவது இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x