

மின்சாரத்துறக்கென்றே தனிச்சட்டமாக ‘செயல்திறன் ஒழுங்குமுறை சட்டம்’ என்பதை யோகி ஆதித்யநாத் தலைமை உத்தரப்பிரதேச மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
இதன் மூலம் மக்களுக்கு தடையற்ற, தாமதமற்ற மின்சார சேவை உறுதி செய்யப்படுவதாக உத்தரப் பிரதேச மாநில செய்திக் குறிப்பு கூறுகிறது.
புகார்களை கவனித்து சரி செய்ய தாமதமானால் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 2 கோடியே 87 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று உ.பி. அரசு அறிவிப்பு தெரிவிக்கிறது.
ரிப்பேர் என்று நுகர்வோர் தொலைபேசி செய்து உடனடியாக சரி செய்யாமல் தாமதம் செய்தால் அவருக்கு நாளொன்றுக்கு ரூ.50 இழப்பீடு அளிக்க வேண்டும்.
தரைக்குக் கீழே செல்லும் மின்சார கேபிள்களில் பழுது ஏற்பட்டு அதைச் சரிசெய்ய தாமதப்படுத்தினால் புகார்தாரருக்கு நாளொன்றுக்கு ரூ.100 ஈட்டுத் தொகை அளிக்கப்பட வேண்டும்.