10 உத்தரவாதங்கள்: அமல்படுத்த மூத்த அதிகாரிகளை ஆலோசனைக்கு அழைத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் 

10 உத்தரவாதங்கள்: அமல்படுத்த மூத்த அதிகாரிகளை ஆலோசனைக்கு அழைத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் 
Updated on
1 min read

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தன்னுடைய திட்டமான ‘10 உத்தரவாதங்கள்’ என்பதை அமல்படுத்த மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த அவர்களை சிறப்புக் கூட்டத்திற்காக புதனன்று அழைத்துள்ளார்.

இதில் மக்கள் நலத் திட்டங்களான தடையற்ற மின்சாரம், குப்பைகளற்ற டெல்லி, அதிகாரபூர்வமற்ற காலனிகளுக்கு அடிப்படை வசதிகள், குழாய் மூலம் தண்ணீர் விநியோகம், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி, சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவினருக்கும் இலவச பேருந்துப் பயண வசதி, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகல், பெண்கல் பாதுகாப்பு, யமுனை நதியை சுத்தம் செய்வது ஆகியவை அடங்கும்.

இதனை நிறைவேற்ற வழிவகைகள் என்ன, வழிமுறைகள் என்ன என்பதை விவாதிக்க பலதுறைகளிலிருந்தும் மூத்த அரசு அதிகாரிகளை ஆலோசனைக்காக அழைத்துள்ளார் கேஜ்ரிவால்.

“அனைத்து அரசு செயலர்கள், முதன்மைச் செயலர்கள், அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.” என்று ஆம் ஆத்மிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமைச்சரவைக் கூட்டமும் புதான்ன்று நடைபெறுகிறது.

திங்களன்று தங்களது துறைகளில் பதவியேற்ற டெல்லி அமைச்சர்கள் ‘உத்தரவாத அட்டை’யில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி மொழி அளித்துள்ளனர். இதில் மாசற்ற டெல்லி மற்றும் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் ஆகியவையும் அடங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in