

பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு முழு பொறுப்பு ஏற்கிறேன். ஆனால் இந்த முடிவு, கர்நாடக அரசின் செயல்பாட்டுக்கு மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பாக கருத முடியாது என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூருவின் வளர்ச்சியை பின்னோக்கி அழைத்து சென்ற பாஜகவுக்கு மக்கள் வாக்களித் துள்ளனர். மக்களின் இந்த முடிவை ஏற்றுக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியின் தோல் விக்கு நானே முழு பொறுப்பை யும் ஏற்றுகொள்கிறேன்.
மக்களின் இந்த முடிவை, எனது தலைமை யிலான கர்நாடக அரசின் செயல் பாட்டுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பாக கருத முடியாது. கடந்த மாநகராட்சி தேர்தலை விட இம்முறை அதிக வார்டுகளையும்,வாக்குகளையும் பெற்றிருக்கிறோம்.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
ஆம் ஆத்மி வெற்றிப் பெற்றதால், பாஜகவை மக்கள் புறக்கணித்து விட்டார்கள் என கூற முடியாது. அதே போலத்தான் பெங்களூரு மாநகராட்சி தேர் தலுக்கும், அரசின் செயல்பாட்டுக் கும் தொடர்பில்லை.
வார்டில் உள்ள பிரச்சினை களை மனதில் வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். இருப்பினும் தோல்விக்கான காரணம் குறித்து, விரிவாக ஆராயப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிமுக தோல்வி
பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் 7 வார்டுகளில் போட்டி யிட்ட அதிமுக, 6 வார்டுகளில் டெபாசிட்டை இழந்துள்ளது.
ஒரே ஒரு வார்டில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, 3-வது இடத்தை பெற்றுள்ளது.
முனீஸ்வரா நகரில் போட்டி யிட்ட துளசி அன்பரசன் 2418 வாக்குகள் பெற்று, மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்தப் பகுதியில் இன்றளவும் எம்ஜிஆர் ரசிகர்கள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.