Last Updated : 17 Feb, 2020 03:17 PM

 

Published : 17 Feb 2020 03:17 PM
Last Updated : 17 Feb 2020 03:17 PM

அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் டெல்லி வருவாய் ரூ.60,000 கோடியாக அதிகரிப்பு என பாராட்டிய காங். தலைவர் மீது காங். கட்சியினரே தாக்கு

டெல்லி மாநிலத்தை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ‘சர்ப்ளஸ்’ மாநிலமாக மாற்றியுள்ளதாக மும்பை காங்கிரஸின் முன்னாள் தலைவர் மிலிந்த் தியோரா பாராட்ட அதற்காக தன் கட்சியினரிடமிருந்தே கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

மிலிந்த் தியோரா தன் ட்விட்டர் பக்கத்தில் , “அதிகம் அ?றியப்படாத மற்றும் வரவேற்கக்கூடிய உண்மையைப் பகிர்கிறேன். அரவிந்த் கேஜ்ரிவால் தலைமை டெல்லி அரசு கடந்த 5 ஆண்டுகளில் மாநில வருவாயை இரட்டிப்பாக பெருக்கியுள்ளதோடு வருவாய் உபரியையும் பராமரித்து வருகிறது. சிந்தனைக்கான விஷயம்: டெல்லி இப்போது இந்தியாவிலேயே முன் எச்சரிக்கையான விவேகமான மாநிலமாகத் திகழ்கிறது” என்று பதிவிட்டார்.

இதனையடுத்து காங்கிரஸ் தரப்பிலிருந்தே தியோரா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன, முதலில் அஜய் மாக்கன் “சகோதரா, காங்கிரஸை விட்டு விலக முடிவெடுத்தால் தயவு செய்து செய்யுங்கள், பிறகு அரைகுறை உண்மைகளை பரப்புங்கள்” என்று சாடினா.ர்

இதோடு காங்கிரஸ் ஆட்சியின் வருவாய் உருவாக்கத்தை அவர் பட்டியலிட்ட போது, 2013-14-ல் ரூ.37,459 கோடி, அதாவது 14.87% வளர்ச்சி, இது ரூ.60,000 கோடியாக அதிகரித்தது என்றாலும் வளர்ச்சி விகிதம் 9.90% தான், எனவே குறைந்துள்ளது என்று ஒரு தர்க்கத்தை முன் வைத்தார்.

ராகுல் காந்திக்கு நெருக்கமாகக் கருதப்படும் முன்னாள் சாந்த்னி சவுக் எம்.எல்.ஏ அல்கா லாம்பாவும் தியோராவை விமர்சிக்கும் போது, “காங்கிரஸ் கட்சியில் தந்தையின் பெயரால் இணைந்தவர், அரசியல் வம்சாவளி காரணமாக தேர்தலில் டிக்கெட் பெற்றவர், பிறகு தலைமையில் கட்சி தோற்றது. இப்போது கட்சிக்காக போராட வேண்டிய நேரத்தில், கிதார் வாசியுங்கள்” என்று தியோராவை மறைமுகமாகக் குறிப்பிட்டு சாடினார்.

இன்னொரு காங்கிரஸ் தலைவர் ராதிகா கேரா, “முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு ஒரு மூத்த தலைவரிடமிருந்து ஏமாற்றமே எஞ்சுகிறது. நம் கட்சியை ஊக்குவிப்பதை விடுத்து ஆம் ஆத்மியை ஆதரிக்கின்றனர். சிந்தனைக்கு ஒரு விஷயம்- 1994 முதலே டெல்லி சர்ப்ளஸ் மாநிலமாகவே உள்ளது, 2011-ல் ஷீலாஜியின் ஆட்சியில் உச்சம் சென்றது” என்றார்.

ஆம் ஆத்மியை ப.சிதம்பரம் புகழ்ந்ததற்காக முதலில் ஷர்மிஷ்தா முகர்ஜி சிதம்பரத்தை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x